இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், 2025 ஜனவரியில் இருந்து 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமான பணிகளுக்காக சென்றுள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலில் நிர்மாணத்துறையில் வேலை வாய்ப்பு பெற்ற 41 வேலை தேடுபவர்களுக்கு நேற்று (10) பணியகத் தலைவர் கோசல விக்கிரமசிங்க தலைமையில் விமானச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த குழு நேற்று இஸ்ரேல் புறப்பட்டு சென்றது.
மேலும் 177 பேர் இஸ்ரேலில் கட்டுமான பணிகளுக்காக வெளியேற தயாராகி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து விலகி ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொழிலாளர்கள் செல்லும் போக்கு காணப்படுவதாகவும், அதற்கேற்ப இலங்கையர்கள் இஸ்ரேலுக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.