கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி வணக்க கொபவக தம்மிந்த தேரர் இன்று (11) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் கட்டப்பட்ட வீடு தொடர்பான விவரங்களை வழங்குவதற்காக அவர் இன்று சி.ஐ.டி.யில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ருஹுனு கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (10) ஆஜராகியிருந்தார்.
தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய திஷான் குணசேகர, இந்த வீடு விமலரத்ன என்ற நபரால் கட்டப்பட்டது என்றும், கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் அப்போதைய தலைமைக் குருவான சோரத தேரர் நிதியளித்ததாகவும் கூறினார்.
அந்த வீடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.