பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தையே பிரான்ஸ் அரசு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது எதிர்காலத்திற்கான சுத்தமான எரிசக்தியாக கருதப்படும் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
பூமியின் அடியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் பூமியின் இயற்கையான செயல்முறைகளால் உருவாகும் ஹைட்ரஜன் வகை எனவும், இதனை எரிக்கும்போது தண்ணீரை மாத்திரம் வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறுசுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச்சூழல் மாசற்ற எரிசக்தி ஆதாரம் என்பதால் எதிர்கால எரிசக்தியாக வெள்ளை ஹைட்ரஜன் கருதப்படுவதாகவும், இதனால் எந்த விதமான பச்சை வீட்டு வாயுக்களும் உருவாகாது எனவும், எனவே இது கார்பன் நீக்கமற்ற எரிசக்தியாகச் செயல்படுமெனவும் மாசு ஏற்படுத்தும் எரிசக்திகளுக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பானது உலகளாவிய ஹைட்ரஜன் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இது உலகளவில் மீளச்சுழற்சி செய்யக்கூடிய எரிசக்திக்கான வரலாற்றுச் செயல்முறையாகக் கருதப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.