கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தரங்களை ஏழு நாடுகள் மட்டுமே பூர்த்தி செய்ததாக செவ்வாயன்று (11) வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.
சுவிஸ் காற்றின் தர கண்காணிப்பு நிறுவனமான IQAir தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் சாட் மற்றும் பங்களாதேஷ் உலகின் மிகவும் காற்றின் தரம் குன்றிய நாடுகளாக இருந்தன.
சராசரி காற்றின் தரம் அங்கு WHO வழிகாட்டுதல்களை விட 15 மடங்கு அதிகமாக இருந்தது.
அதேநேரம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பஹாமாஸ், பார்படோஸ், கிரெனடா, எஸ்டோனியா மற்றும் ஐஸ்லாந்து மட்டுமே தரவரிசையில் காற்றின் தரத்தை பூர்த்தி செய்ததாக IQAir தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காற்று மாசுபாட்டால் இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது.
புகைமூட்டம் அளவைப் பொறுத்தவரை உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சாட், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு அடுத்தபடியாக அது உள்ளது.
உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் பதின்மூன்று இந்தியாவில் உள்ளன, அசாமில் உள்ள பைர்னிஹாட் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி உள்ளது.
இதனிடையே, அமெரிக்கா அதன் உலகளாவிய கண்காணிப்பு முயற்சிகளை நிறுத்திய பின்னர் புகைமூட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் கடினமாகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.