ஜம்மு-காஷ்மீரின் மஹோர் அருகே இன்று (11) மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஹோரின் கங்கோட்டில் ஜம்முவிலிருந்து சாங்லிகோட்டுக்குச் சென்று கொண்டிருந்த மினி பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகள், மீட்புக் குழுக்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது.