அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு எதிராக நடந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் நடைபெற்றதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.