தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் 55 வயதுடைய பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் எனவும், இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன், மகள் மற்றும், மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.