யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் கடந்த 3 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பொருத்தப்பட்டது.
சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த களஞ்சியசாலையில் இருந்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.