2025 லண்டன் மரதன் ஓட்டப் பந்தயமானது குறித்த துறையில் உலகின் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்க உள்ளது.
அதன்படி, ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் 56,000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் 26.2 மைல் தூரத்தை நிறைவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நவம்பரில் நியூயோர்க் மரதன் அமைத்த 55,646 போட்டியாளர்களின் தற்போதைய சாதனையை விட அதிகமாகும்.
1981 ஆம் ஆண்டு முதல் லண்டன் மரதன் போட்டி தொடங்கியதிலிருந்து, 1.3 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த போட்டியை முடித்துள்ளனர்.
இந்த ஆண்டுப் பந்தயத்தில் பங்கேற்க 840,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர், இது 2024 சீசனின் 578,304 என்ற உலக சாதனையை முறியடித்துள்ளது.
விண்ணப்பதாரர்களில் 49% பேர் பெண்களிடமிருந்து வந்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைதூர ஓட்டப் பந்தய வீராங்கனை எலியுட் கிப்சோஜ் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு லண்டன் மரதனுக்குத் திரும்புகின்றமையும் விசேட அம்சமாகும்.