உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், உடல் நலம் தேறி வருவதாகத் தகவல் வெளிவந்த நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் அவரது புதிய புகைப்படத்தை வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தில் போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து திருப்பலியில் பங்கேற்றிருப்பதைக் காணலாம்.
போப் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளியான முதல் புகைப்படம் இதுவாகும்.
…..
88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.