சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நியூசிலாந்து மகளிர் அணிக்கு வழங்கியது.
அதன்படி, நியூசிலாந்து அணி 14 ஓவர்கள் மற்றும் ஒரு பந்து முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, போட்டிக்கு மழையால் இடையூறு ஏற்பட்டது.
பின்னர், மழை காரணமாக போட்டியை கைவிடுவதற்கு போட்டி நடுவர்கள் தீர்மானித்தனர்.
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் வெற்றி-தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது