காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தது
ஆனால், காசாவில் பெரும்பாலான உயிரிழப்புகள் பொதுமக்களே என காசா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறதுடன் இந்த தாக்குதல்கள் காசாவில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன.
மேலும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் வைத்திய வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது