2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL)தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார்.
அணியின் வழக்கமான தலைவர் ஹர்திக் பாண்டியா, கடந்த சீசனில் மும்பையின் இறுதி ஐ.பி.எல். ஆட்டத்தில் ஒரு போட்டித் தடையை எதிர்கொண்டார்.
இதனால், மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் 2025 ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் முதல் ஆட்டத்தை அவர் தவறவிடுவார்.
அதனால், முதல் போட்டியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தவுள்ளார்.
மும்பை அணியின் முதல் ஆட்டம் மார்ச் 23 அன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிராக உள்ளது.
2024 ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணியின் மெதுவான ஓவர் ரேட் காரணமாக பாண்டியாகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த சீசனில் அவர் செய்த மூன்றாவது தவறு இது என்பதால், அடுத்த ஐ.பி.எல். ஆட்டத்தில் ஒரு போட்டி இடைநீக்கமும், 30 இலட்சம் இந்திய ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.