தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை வாதத்தின் இறுதி நாள் விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது 1 மில்லியன் ரூபாயாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை 250,000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.
எனினும் தமக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.