மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர், ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த கிருஸ்ணரூபன், திருச்செல்வம், பாஸ்கரன், மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையிலேயே நேற்று இதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.