கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடல் மட்டம் அதிவேகமாக உயரும் என்றும் இதன் விளைவாக பலகோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உலக வானிலை ஆய்வியல் அமைப்பின் இயக்குநர் Stefan Uhlenbrook இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்” ”அன்டார்ட்டிக் மற்றும் கிரீன்லாந்து உட்பட உலகம் முழுவதும் தற்போது 2 லட்சத்து 75 ஆயிரம் பனிப்பரப்புகள் மட்டுமே இருப்பதாகவும், பனிப்பாறைகளை பாதுகாப்பதன் மூலம் உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.