தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காட்டுத் தீ காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.