பிரபல பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு அவரது தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ.இ நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி மும்பையிலுள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கணகண்டெடுக்கப்பட்டார்.
அவரது பிரேத பரிசோதனையில் இது தற்கொலை என கூறப்பட்டாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்தார். இது தொடர்பாக மும்பை பொலிஸார் அமுலாக்கத்துறை, சி.பி.ஐ.இ போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு சி.பி.ஐ.இ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., தரப்பில், ‘கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை.
சமூக வலைதளங்களில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை; மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம்’ என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ., நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.