இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.30 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. அத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், லிபியா 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.