கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்
கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார்
இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது
மேலும் இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.