குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42 பேரைக் காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் காத்தான்குடிப் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த 42 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த 28 பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 18 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே நேரம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏறாறிவந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.