எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையாக 74 ரூபா முதல் 160 ரூபா என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்புக்கு தனித்தனியாக இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகை மன்னார், பூநகரியில் ஆகும்.
அங்கு அந்த தொகை 74 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ள.
அதேநேரம், வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிக அதிகபட்ச தொகை லஹுகலவில் ஆகும்.
அங்கு அந்த தொகை 160 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.