கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும் பல சொத்து திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.