முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரிய மனுவைத் தொடரலாமா, வேண்டாமா? என்பது குறித்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று அறிவிக்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் மனுவை இன்று (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
களனிப் பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு சொத்து போலி பத்திரம் மூலம் விற்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி ரணவீர இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.