மியன்மாரில் வெள்ளிக்கிழாமை (28) 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தினால் மியன்மாரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவடி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், சாகைங் அருகே மையமாக இருந்த பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கங்களின் தாக்கம் அந்த அளவுக்கு அதிகமாக இருந்ததால், சுமார் 900 கி.மீ தொலைவில் உள்ள பாங்கொக்கை நிலநடுக்கம் உலுக்கியது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்களில் இருந்த நீர்த்தொட்டிகளில் இருந்து தண்ணீர் வெளியேறியது.
மேலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் அசைந்ததால் அதிலிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும், தாய்லாந்து தலைநகரில் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.