”மலையக பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு இந்த வருட பாதீட்டில் அரசாங்கம் நிதி ஒதுக்காமைக்கு உரிய வகையில் பதிலொன்றை எதிர்பார்ப்பதாக” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தங்களது கட்சியின் வேட்பாளர்களுடன் கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ” தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவினை வேதன நிர்ணய சபையின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.