ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
அதன்படி இன்று முதல் வரும் 10-ம் திகதி வரை பயணம் பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் செல்கிறார்.
மேலும் இரு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களைச் அவர் சந்திக்க உள்ளார்
இதேவேளை போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு செல்லும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த 1998-ம் ஆண்டில் போர்ச்சுகல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.