18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 நடக்கும் 20-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதேவேளை 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும்,3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
அத்துடன் பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டதுடன் இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.