தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் ஜூன் 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி , தென் கொரியாவின் அதிபர் யுன் சுக்-யியோல் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்
இதேவேளை தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவு சட்டமூலம் தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததுடன் . இதையடுத்து, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை இராணுவ சட்டத்தை அமுல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்
இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றதுடன் இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.