ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (29) முன்வந்தது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள போராடி வரும் தெற்காசிய தீவு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் இறப்பர் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம் 44 சதவீத வரியை விதித்தது.
அதிகரித்த இந்த கட்டணங்கள் வொஷிங்டனால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை அதிகாரிகள் அவற்றை நீக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனினும், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில், ட்ரம்பின் வரிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தீவு நாட்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ செவ்வாயன்று (29) செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த அபாயங்கள் ஏற்பட்டால், அந்த அதிர்ச்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
மேலும் தற்போதுள்ள IMF திட்டத்தின் வரையறைகளுக்குள் குறிப்பிட்ட கொள்கை பதில்களை உருவாக்குவதில் நாட்டிற்கு ஆதரவளிப்போம் – என்றும் அவர் உறுதியளித்தார்.
கொழும்பில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் வொஷிங்டன் விதிக்கும் அதிகரித்த வரிகளை மீண்டும் அமுல்படுத்தினால் நாட்டின் மீட்சி பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர் IMF இன் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற மிக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்க அந்நிய செலாவணி தீர்ந்து போன பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை IMF இடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு பொதியை பெற்றது.
2022 ஆம் ஆண்டில் அமெரிக்க வரி அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, இலங்கை அதன் முன்னோடியில்லாத நெருக்கடிக்குப் பின்னர் முதல் முழு ஆண்டு பொருளாதார விரிவாக்கத்தைப் பதிவு செய்தது.
2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது, இது முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 5.0 சதவீதமாகக் கொண்டு வந்தது, இது 2023 இல் 2.3 சதவீத சுருக்கத்துடன் காணப்பட்டது.
இலங்கையின் மோசமான பொருளாதார செயல்திறன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதம் சுருங்கியது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மாதங்களாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையானது வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது.
இது இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது.
அவரை அடுத்து ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க வரிகளை இரட்டிப்பாக்கினார், மானியங்களைக் குறைத்தார், விலைகளை உயர்த்தினார் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்தினார்.
எனினும், 2025 செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்.
பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய நிர்வாகம், பிணை எடுப்புக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மற்றும் வருவாயை உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக IMF தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் பிணை எடுப்புத் திட்டத்தின் அடுத்த மீளாய்வு எதிர்வரும் ஜூன் மாதத்தில் IMF நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் இவான் பாபஜெர்ஜியோ கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.