சிரியாவின் டமாஸ்கஸ் மாகாணம் ஜரமனா பகுதியில் சன்னி பிரிவினருக்கும், டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 13பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்ததையடுத்து ஜனாதிபதியாக இருந்த அல் அசாத் ரஷ்யாவுக்கு தப்பிச்சென்றதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இதேவேளை, சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையிலேயே , சிரியாவின் குறித்த பகுதியில் சன்னி பிரிவினருக்கும், டுரூஸ் மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது . இந்த மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .
இரு தரப்புக்கும் இடையேயான மோதலால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.