நைஜீரியாவில் சிறுமியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சரை அந்நாட்டு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நெடும்போ நந்தி நதைத்வா (Netumbo Nandi-Ndaitwah) தலைமையிலான ஸ்வாபோ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவரது அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தவர் மெக் ஆல்பர்ட் ஹெங்காரி(Mac-Albert Hengari). 59 வயதான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விண்ட்ஹோக்கில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் அவர் சாட்சியத்தை மறைக்க பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டில் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை அவருக்கு நீதிமன்றினால் பிணை மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆல்பர்ட் ஹெங்காரியை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி நெடும்போ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.