கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் ரயில் ஒன்று இன்று தடம்புரண்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாகும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.