ஜம்மு – காஷ்மீரில் இராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.
இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாகவும் அதில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டு இராணுவம், பொலிஸார், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.