மாலைத்தீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu)15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார்.
இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.