பிரேஸிலில், பிரபல பொப் இசைப் பாடகியான லேடி காகாவின் இசை நிகழ்ச்சியில் வெடி குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச் சாட்டியில் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இசை நிகழ்ச்சியானது கடந்த சனிக்கிழமை ரியோ டி ஜெனிரோ பகுதியில் உள்ள கோபகபனா(Copacabana ) கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இலவசமாக நடைபெற்ற குறித்த இசை நிகழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக 2.1 மில்லியன் மக்கள் அங்கு வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேசிலில் உள்ள LGBTQ சமூகத்தை குறிவைத்தே இத் தாக்குதல் முயற்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















