இந்திய – பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது.
அதன்படி, பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேலாளர்கள் போன்றோருக்கு அறிவிப்பு குறித்த வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் மேற்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது விடுமுறையில் உள்ள அனைத்து வருவாய் கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களும் தலைமையகத்திற்கு திரும்பி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், எந்த அதிகரிக்கும் விடுமுறை வழங்கப்படாது என்றும், நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.