இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி , ராணுவத் தளபதி , கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் காலத்து கொண்டுள்ளனர்.
இரு நாடுகளிடையே நேற்று மாலை போர் முடிவுக்கு வந்த பின்னரும் இரவு பல மணி நேரம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது குறித்தும் குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 3-வது ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.