இலங்கை அணியின் அதிரடி வீரர் குசல் மெண்டிஸ், 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் எஞ்சிய போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோஸ் பட்லர் தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் பங்கேற்க மட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) அண்மையில் பங்கெடுத்த இலங்கை நட்சத்திரம் நடப்பு ஐ.பி.எல். சீசனில் எஞ்சிய போட்டிகளில் குஜராத் அணியில் பங்கெடுப்பார் என கூறப்படுகிறது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.














