இஸ்ரேல் – காஸா இடையே 19 மாதங்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-மவசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இன்று அதிகாலையில் (18) நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு காஸாவின் ஜபாலியாவில் உள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் அதே நேரத்தில் அதே பகுதியில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் இதனிடையே காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















