2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (21) நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 63 ஆவது போட்டியானது இன்று இரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகும்.
பிளேஆஃப் இடத்தைப் பிடிக்கப் போராடும் இரு அணிகளுக்கும் இடையிலான முக்கியமான மோதல் இது.
மேலும், அவர்களின் போட்டி மறைமுக நாக் அவுட் மோதலாக இருக்கலாம்.
ஹார்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி, 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
அவர்கள் 12 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனிடையே, போட்டியின் போது கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை அணியும், டெல்லி அணியும் இதுவரை 36 ஐ.பி.எல். போட்டிகளில் மோதியுள்ளன.
அதில் மும்பை அணி 20 போட்டிகளிலும், டெல்லி அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
2025 ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்தமையும் குறிப்பிடத்தக்கது.