ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கையால், கேலர் மற்றும் நடர் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்கும் பணிகள் தொடர்ந்து முடக்கப்பட்டது.
இந் நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
‘ஒபரேஷன் த்ராஷி’ என்ற பெயரில் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.