கொழும்பு உட்பட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) கூறியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, இடைநிறுத்தக் காலத்தில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து, போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்குமாறு NWSDB பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, நீர் வெட்டு பின்வரும் பகுதிகளை பாதிக்கும்:
• கொழும்பு 01 – 15
• ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை
• கடுவலை
• பத்தரமுல்லை
• கொலன்னாவை
• கொட்டிஹாவத்தை
• முல்லேரியாவ
• ஐ.டி.எச். பகுதி
• மஹரகம
• தெஹிவளை
• கல்கிஸை
• இரத்மலானை
• மொறட்டுவை