கரையோர மார்க்கமூடான ரயில் சேவையானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் அம்பலாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் பழுதடைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை அருகே 311 ஆம் இலக்க அஞ்சல் ரயில் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்துள்ளதாகவும், இதனால் கடலோரப் பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.