நான்கு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (28) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) காலை 10 மணி வரை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கண்டி மாவட்டத்தில் கங்கஇஹலகோரல மற்றும் பஸ்பாகேகோரல ஆகிய பகுதிகளுக்கு 01 ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.