ஜூன் முதலாம் திகதி முதல் அசாமில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அசாமின் இரண்டாவது பெரிய நகரமான சில்சாரில் கடந்த 24 மணி நேரத்தில் 415.8 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சு பதிவாகியுள்ளது.
இது 1893 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை வீழ்ச்சாகும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1 அன்று சில்சாரில் பெய்த மழை, 132 ஆண்டுகால சாதனையான 290.3 மி.மீ. மழையை ஒரு நாளில் முறியடித்தது.
அதேநேரம், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே 31 அன்று மிசோரமில் இயல்பை விட 1,102 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
மே 28 முதல் ஜூன் 1 வரை கடந்த ஐந்து நாட்களில் மேகாலயாவில் கனமழை பதிவாகியுள்ளது.
பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படும் சோஹ்ரா மற்றும் மௌசின்ராம் ஆகியவை முறையே 796 மிமீ மற்றும் 774.5 மிமீ மொத்த மழையைப் பெற்றுள்ளன.
மேகாலயாவில், 10 மாவட்டங்கள் திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
திரிபுராவில் 10,000க்கும் மேற்பட்டோர் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஆறுகள் நிரம்பி வழிவதாலும், கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளாலும் ஏற்பட்ட வெள்ளத்தில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,365 வீடுகள் சேதமடைந்துள்ளன.