அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவு கூர கூடியிருந்த மக்கள் குழு மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர்.
மொஹமட் சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்ட தாக்குதல்தாரி, கூட்டத்தைத் தாக்கும் போது “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்டார்.
மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் Molotov cocktail குண்டுகளைக் கொண்டு தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு மத்தியப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஆதரித்து பேரணியில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதாக சாட்சிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காயமடைந்த மற்றவர்களுக்கு இலகுவான காயங்கள் இருப்பதாகவும் போல்டர் நகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.