இந்தியாவின் தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலானஆட்சியில் இந்தியா வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2014-க்கு முன்பு பொருளாதாரத்தில் 11-வதுஇடத்தில் இருந்த இந்தியா தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , இந்தியாவில் தமிழகம் முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதிலும் இன்னும் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாணவர்கள் சிலமாவட்டங்களில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.