டொராண்டோவின் லாரன்ஸ் ஹைட்ஸில் செவ்வாய்க்கிழமை (03) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அந் நாட்டு நேரப்படி இரவு 8.30 மணிக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்ததாக டொராண்டோ பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டினை அடுத்து சம்பவ இடத்திலேயே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்துவிட்டதாகவும், மேலும் நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் விபரம் தெரிவிக்கப்படாத நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.