தென்கொரியாவில் ஜனாதிபதியாக செயல்பட்ட யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால ஜனாதிபதியாக ஹான் டக் சூ (Han Duck-soo) நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தென்கொரியாவில் நேற்று(03) ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.
இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் லி ஜே மியுங் (Lee Jae-myung) வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றப்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லி ஜே மியுங், வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, வடகொரியா அத்துமீறி செயல்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ நட்பு மூலம் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .